ஆண்களின் பாலியல் ஆசை குறைவதற்கான 5 காரணங்கள் என்னென்ன!

141

rcpp19.ru , rcpp19.rum , tamil kamakathaikal , tamil doctor , tamil sex.com

பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாமல் போகும் நிலையையே பாலியல் நாட்டம் அல்லது விருப்பம் குறைதல் என்கிறோம். பாலியல் ஆசை என்பது உயிரியல், உறவு சார்ந்த மற்றும் தனிப்பட்ட பல காரணிகளைப் பொறுத்து அமைகிறது.

பாலியல் ஆசை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதுமட்டுமின்றி, ஒரே நபருக்கும் அது ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு அளவில் இருக்கும், அது அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்களைப் பொறுத்தது. பெரும்பாலும், ஆண்களுக்கு பாலியல் நாட்டம் குறைவாக இருப்பது ஒரு பிரச்சனையாகத் தெரிவதில்லை. இருப்பினும், ஒருவருக்கு எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லாமல் பாலியல் நாட்டம் குறைந்தால் அது கவலையை உண்டாக்கலாம், அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம்.

ஆண்களின் பாலியல் நாட்டம் குறைவதற்கான காரணங்கள் (What are the causes of low sex drive in men?)

பின்வரும் உயிரியல் மற்றும் உளவியல் காரணங்களால் ஆண்களின் பாலியல் நாட்டத்தில் மாற்றம் ஏற்படலாம்:

மன அழுத்தம்: ஒருவர் வேலை செய்யும் இடத்திலோ, களைப்பு, திருப்தியின்மை போன்ற காரணங்களாலோ அதிக மன அழுத்தத்தால் பாதிப்படையும்போது அவது பாலியல் விருப்பம் பெரிதும் பாதிக்கப்படலாம். அதிக மன அழுத்தத்திற்கும் ஹார்மோன் அளவுகள் சீர்குலைவதற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது, இது தமனிகளைச் சுருக்கவும் வாய்ப்புள்ளது. தமனிகள் சுருக்கமடைந்து இரத்த ஓட்டம் தடைபட்டால் அது விறைப்பின்மைக்கு வழிவகுக்கலாம்.
டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருத்தல்: டெஸ்டோஸ்டிரோன் விந்தகங்களில் உற்பத்தியாகும் ஒரு முக்கியமான ஆண் ஹார்மோனாகும். தசைகளின் உருவாக்கம், விந்தணு உற்பத்தியைத் தூண்டுதல் மற்றும் எலும்பின் நிறை ஆகியவற்றுக்கு டெஸ்டோஸ்டிரோன் காரணமாக உள்ளது. ஒருவரின் பாலியல் நாட்டத்தைப் பாதிப்பதிலும் டெஸ்டோஸ்டிரோன் அளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதால் (ஆண்ட்ரோஜன் குறைபாடு) பாலியல் நாட்டமும் குறைகிறது. வயது அதிகரிக்கும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவது இயல்பான ஒன்று. எனினும், மிகவும் அதிகமாகக் குறைவது பாலியல் நாட்டத்தைக் குறைக்கலாம்.
சில மருந்துகள்: இரத்த அழுத்தம் மற்றும் மன இறுக்கத்திற்காகப் பரிந்துரைக்கப்படுபவை போன்ற சில மருந்துகள் ஒருவரின் பாலியல் ஆசைகளைப் பாதிக்கலாம்.
மன இறுக்கம்: மன இறுக்கம், பாலியல் விருப்பம் உட்பட ஒருவரது வாழ்வின் அனைத்து அம்சங்களையுமே பாதிக்கிறது. குறிப்பிட்ட சில செரோட்டோனின் மறு பயன்பாட்டுத் தடை மருந்து (SSRIகள்) போன்ற மன இறுக்கத்திற்கான சில மருந்துகளின் பக்க விளைவு பாலியல் விருப்பத்தைப் பாதிக்கலாம்.
நாள்பட்ட நோய்கள்: வலி போன்ற நாள்பட்ட நோய்களும் மற்றும் பிற அறிகுறிகளும் ஒருவரை உடலுறவைப் பற்றி யோசிக்கவே முடியாதபடி செய்யலாம். இதனாலும் பாலியல் நாட்டம் பாதிக்கப்படும்.

பாலியல் விருப்பம் குறைவாக இருப்பதை எப்படிக் கண்டறிகிறோம்? (How is low libido diagnosed?)

மருத்துவர் உங்கள் பாலியல் நாட்டம் குறைவாக இருப்பதற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்வார்.

பாலியல் விருப்பம் குறைவாக இருப்பதைக் கண்டறியும் படிநிலைகள்:

மருத்துவ வரலாறு மற்றும் மருந்துகள் மாற்றி ஆய்வு செய்தல்
உடல் பரிசோதனை
இரத்தப் பரிசோதனைகள்
ஆண்களின் குறைந்த பாலியல் நாட்டப் பிரச்சனைக்கு எப்படி சிகிச்சையளிக்கப்படுகிறது? (How is low sex drive in men treated?)

இதற்கு அடிப்படைக் காரணங்களைச் சரி செய்யும் சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன:

நீங்கள் தற்போது எடுத்துக்கொள்ளும் மருந்துகள் இதற்குக் காரணமாக இருப்பதாகத் தெரிந்தால், அவற்றை மருத்துவர் மாற்றலாம். இரத்தத்தில் ஆண்ட்ரோஜன் குறைபாடு (குறைவான டெஸ்டோஸ்டிரோன் அளவு) இருப்பதாகக் கண்டறியப்பட்டால், டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சை தேவைப்படலாம்.
மன அழுத்தத்தை, தகுந்த முறைகளைப் பின்பற்றி சமாளிக்கலாம்.
பாலியல் நாட்டம் குறைவதால் உறவில் சிக்கல்கள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)

உங்கள் பாலியல் விருப்பத்தை அதிகரிக்க பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றலாம்:

ஊட்டச்சத்துள்ள உணவுப் பழக்கத்துடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும்
போதுமான அளவு தூங்க வேண்டும்
மன அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்