ஆண் விந்து வெளியேறாமை பிரச்னைக்கான தீர்வுகள்!

269

1. மீண்டும் மீண்டும் புணர்ச்சிப் பரவசநிலை (Repeated orgasms)

பல இளைஞர்கள் குறுகிய நேரத்தில் பலமுறை புணர்ச்சிப் பரவசநிலை அடையும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் புணர்ச்சிப் பரவசநிலைக்கிடையே குறுகிய மீட்பு நேரத்தைக் கொண்டிருப்பார்கள், மேலும் குறுகிய காலத்திற்குள் இரண்டு முதல் ஐந்து முறை வரை புணர்ச்சிப் பரவசநிலை அடைய (சுய இன்பம் மூலமாகவோ அல்லது பாலுறவு மூலமாகவோ) அவர்களால் முடியும். இது நிகழும் போது, விந்து உற்பத்திக்கு குறைந்த நேரமே இருந்திருக்கும் என்பதால் சேமிப்பு உறுப்புகளில் விந்தனுக்கள் இல்லாமல் இருக்கக் கூடும், இதனால் மீண்டும் நிகழும் புணர்ச்சிப் பரவசநிலையில் மிகவும் குறைந்த விந்தணுக்கள் வெளியேறலாம் அல்லது விந்தணுவே வெளியேறாமல் போகக்கூடும். அந்த நபர் புணர்ச்சிப் பரவசநிலையின் போது ஆண்குறி சுருங்குவதை உணரக்கூடும், எனினும் ஆண்குறியில் இருந்து விந்தணுக்கள் வெளியேறாமல் இருந்திருக்கக் கூடும். சில மணி நேர ஓய்வுக்குப் பிறகு, விந்தணுக்கள் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும், விந்து வெளியேறாத புணர்ச்சிப் பரவசநிலை சரியாகிவிடும்.

2. பின்னோக்கு விந்தணு வெளியேற்றம் (Retrograde ejaculation)

சில விந்து வெளியேறாத புணர்ச்சிப் பரவசநிலை சூழல்களில், விந்தணுக்கள் உற்பத்தி ஆகியிருந்தாலும் கூட, ஆண்குறியில் முன்னோக்கிச் சென்று வெளியேறுவதற்கு பதிலாக, பின்னோக்கிச் சென்று சிறுநீர்ப்பையை அடைகிறது. பின்னர் அந்த விந்தணு சிறுநீருடன் கலந்து, அந்த நபர் சிறுநீர் கழிக்கும் போது அதனுடன் சேர்ந்து வெளியேறுகிறது. இந்த வகை விந்தணு வெளியேற்றம் பின்னோக்கு விந்தணு வெளியேற்றம் என அறியப்படுகிறது. இது பொதுவாக, புரோஸ்டேட் சுரப்பி அகற்றம், லேசர் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை, புரோஸ்டேட் கதிரியக்க சிகிச்சை, புரோஸ்டேட்டை வெட்டி குறிப்பிட்ட அளவில் புரோஸ்டேட் சுரப்பி அகற்றும் சிகிச்சை (டிரான்சுரேத்தல் ரிசக்சன் ஆஃப் த புரோஸ்டேட் – TURP), நுண்ணலை முறையில் புரோஸ்டேட் சுரப்பி அகற்றும் சிகிச்சை (டிரான்சுரேத்ரல் மைக்ரோவேவ் தெரபி – TUMT) மற்றும் புரோஸ்டேட்டை ஆழமாகக் கீறி குறிப்பிட்ட அளவில் புரோஸ்டேட் சுரப்பி அகற்றும் சிகிச்சை (டிரான்சுரேத்ரல் இன்சிசன் ஆஃப் த புரோஸ்டேட் – TUIP) போன்ற விரிவடைந்த புரோஸ்டேட்டுக்காக செய்யப்படும் நடைமுறைகளின் விளைவாக பெரும்பாலும் ஏற்படுகிறது. பின்னோக்கு விந்தணு வெளியேற்றம் சில மருந்துகள் மற்றும் ஆரோக்கிய நிலைகள் காரணமாகவும் ஏற்படலாம்.

3. விந்து உற்பத்தியில்லாத நிலை (Non-production of semen)

சில அரிதான சூழல்களில், இனப்பெருக்க அமைப்பில் மரபணு அல்லது உடற்கூறு மாறுபாடுகளைக் கொண்ட ஆண்களுக்கு வெளியேறுவதற்கு போதுமான அளவில் விந்தணு உற்பத்தி ஆகியிருக்காது.

புரோஸ்டேட் புற்றுநோயின் (தீவிர புரோஸ்டேட் சுரப்பி அகற்றும் சிகிச்சை) போது அல்லது சிறுநீரகப் புற்றுநோய் அறுவை சிகிச்சையின் (தீவிர சிறுநீர்ப்பை அகற்றும் சிகிச்சை) போது விதைக்கொட்டைகள் (விந்துத் திரவத்தை உற்பத்தி செய்யும் ஒரு ஜோடி உறுப்புகள்) அகற்றப்படும் ஆண்களுக்கு விந்துத் திரவம் இருக்காது, இதனால் விந்து வெளியேறாத புணர்ச்சிப் பரவசநிலையை அடைவார்கள்.

4. இதர காரணங்கள் (Other causes)

விந்து வெளியேற்றுக் குழாய் (விந்துக் குழாய்) அடைப்பு ஏற்படுவதால்
உயர் இரத்த அழுத்த சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளால்
நீரிழிவு நோய், மல்ட்டிபிள் ஸ்கேல்ரோசிஸ் முதலியனவற்றின் காரணமாக நரம்புச் சேதம் ஏற்படுவதால்
முதுகு தண்டு காயங்கள் ஏற்படுவதால்
குறைந்த டெஸ்டோஸ்டிரோன் (இனப்பெருக்க இயக்கக்குறை) இருந்தால்
மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்? (When to visit a doctor?)

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விந்து வெளியேறாத புணர்ச்சிப் பரவசநிலைகள் தீங்கு விளைவிப்பவை அல்ல, எனினும் இதனை அனுபவிக்கும் நபருக்கு, கவனிப்பு தேவைப்படும் ஏதேனும் அடிப்படை மருத்துவ நிலையின் காரணமாக இது ஏற்படவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்கு மருத்துவரின் ஆலோசனை தேவைப்படலாம்.

விந்து வெளியேறாத புணர்ச்சிப் பரவசநிலை மீண்டும் மீண்டும் சுய இன்பம் அல்லது உடலுறவு கொண்டதால் ஏற்பட்டிருந்தால், அது சில மணி நேர ஓய்வுக்குப் பின் சரியாகிவிடும்.

இதற்கான காரணம் சில மருந்து உட்கொண்டதன் பக்க விளைவாக இருந்தால், சம்பத்தப்பட்ட மருத்தின் அளவை மாற்றுதல் அல்லது மருத்தை மாற்றுதல் உதவக்கூடும்.

ஒரு ஆண் ஒரு குழந்தைக்குத் தந்தையாக திட்டமிட்டிருந்தால், மகப்பேறு சிறப்பு மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும். பின்னோக்கு விந்தணு வெளியேற்றம் ஏற்பட்ட சூழல்களில், சிறுநீரில் இருந்து விந்தணுக்களைப் பிரித்தெடுக்க சாத்தியம் இருக்கக் கூடும். இந்த விந்தணு பின்னர் கருமுட்டை செல்லில் பதியப்பட்டு, உருவாகும் இளம்கரு பெண்ணின் கருப்பையில் அறுவை சிகிச்சை மூலம் வைக்கப்படலாம்.

விந்து வெளியேறாத புணர்ச்சிப் பரவசநிலை கர்ப்பமாவதற்கு எதிரான பாதுகாப்பு நிகழ்வாகக் கருதப்படுவதில்லை. விந்து வெளியேறாத புணர்ச்சிப் பரவசநிலை உடைய ஆண்களுக்கு சில நேரங்களில் சிறிய அளவு விந்து வெளியேறும், அதில் விந்தணுக்கள் இருக்கக் கூடும், எனவே தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்க ஆணுறை பயன்படுத்துவது அவசியமாகும்.