பாலியல் உணர்ச்சி அதிகமானால் ஏற்படும் விளைவுகள்!

330

tamilxdoctor , tamil sex doctor , Antharangam , Tamildoctor, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal
பாலியல் தகவல்:காதலும் காமமும் இரண்டற கலந்த ஒன்று. காதலில்லாத காமமும், காமம் இல்லாத காதலும் வீணான ஒன்று தான். ஒன்றுடன் ஒன்று இணையும் போது தான், நம்மால் அதை உணர முடியும். பெரும்பாலும் திருமணமான புதிதில் ஒட்டி திரியும் தம்பதிகளும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தாம்பத்தியத்தில் அதிக ஈடுபாடின்றி இருப்பார்கள். இதை தான் பெரியவர்கள் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று கூறுவார்கள்.

மிக அதிக ஆர்வத்தோடு உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு கட்டத்தில் அதன் மேல் எந்த ஆர்வமும் இல்லாமல் போய்விடும். சிலருக்கு உடல்ரீதியாகவும், சிலருக்கு மனரீதியாகவும் ஆர்வம் குறைந்துவிடும். இந்தப் பிரச்னைக்கு `Sexual burnout condition’ என்று பெயர். ஏதாவது ஒரு விஷயத்தில் அதீத ஆர்வமும், அதிக ஈடுபாடும் கொண்டிருந்தால் காலப்போக்கில் அதன் மீது சலிப்பு வந்துவிடும். இது `Emotional fatique’ எனப்படுகிறது.

தாம்பத்திய உறவு என்பதே பாலியல் கவர்ச்சி சார்ந்துதான் இருக்கிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறையும் போது, மனைவியின் மீதான அன்பும் குறைய ஆரம்பிக்கும். மனைவி சிறிய தவறு செய்தால் கூட அதை பெரிய விஷயமாக்கி சண்டை போடுவார்கள். மனைவியிடம் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.

இந்தப் பிரச்னையை சமாளிக்க, முதலில் ஆண்கள் விஷயத்தை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உறவுக்கு சில நாட்கள் ஓய்வு கொடுக்கலாம். உடலுறவை தவிர மனைவியிடம் சந்தோஷமாக இருக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. மனநிலையை சாதாரணமாக ஓய்வாக வைத்துக் கொள்ளுங்கள். சில நாட்கள் இவ்வித கட்டுப்பாட்டுடன் இருந்தால், இயல்பாகவே உடலுறவு ஆசையானது ஒருநாள் கிளர்ந்தெழும்.

அதனால் கவலைப்பட தேவையில்லை. மனைவியும் இந்தப் பிரச்சனை கணவனிடம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான நேரங்களில் கணவனை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதரவாக செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் விடும் சிறிய இடைவெளியானது, தாம்பத்திய உறவை பெரிய அளவில் பலப்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தாம்பத்தியம் என்பது வெறும் உடலுறவு மட்டுமல்ல. கணவன், மனைவியின் அன்பையும் சார்ந்தது. இருவரும் விட்டு கொடுத்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். விட்டு கொடுத்தல் தம்பதிகளிடையே புரிதலை ஏற்படுத்துவதுடன் அன்பை அதிகரிக்க செய்யும்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான் உடலுறவும் அளவுக்கு அதிகமானால் சலித்து விடும். உடலுறவு என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல மனமும் சார்ந்ததும் கூட. இதை புரிந்து கொண்டு தம்பதிகள் செயல் பட்டால் இல்லற வாழ்கை இனிதாய் இருக்கும். இல்லையெனில் பிரச்சனைகளில் சிக்கி தவிக்க நேரிடும்.