தாம்பத்தியத்தில் இன்பம் அதிகரிக்க முட்டையை இப்படி செய்து சாப்பிடுங்க!

1188

தாம்பத்திய பலத்தை அதிகரிப்பதில் தர்பூசணி, அரைக்கீரை, கற்றாழை,கோழிமுட்டை உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

அரைக்கீரை:

ஆண்மைக் குறைவால் அவதிப்படும் ஆண்களும், தாம்பத்யத்தில் விருப்பமில்லாத ஆண் பெண் இருவரும் இந்தக் கீரையுடன் சின்ன வெங்காயம், நெய் சேர்த்து வேக வைத்துக் கடைந்து காலை, மாலை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு: அரைக்கீரையை சமைக்கும்போது அதனுடன் புளி சேர்த்துச் சமைப்பது வழக்கம். புளி சேர்த்தால் வேண்டிய பலன் கிடைக்காது.

தர்பூசணி

தர்பூசணியை இயற்கை வயாகரா என்று எல்லோரும் சொல்வார்கள். அதற்கு காரணம் சிட்ருலின் (citrulline) எனப்படும் அரிய வகைப் புரதச்சத்து அதிகமாக இருப்பதே . தர்பூசணி சாப்பிட்டதும் இந்த சிட்ருலின், அர்ஜினைன் (arginine) என்ற வேதிப்பொருளாக மாற்றமடைந்து இதயம் மற்றும் ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளை ஊக்குவிக்கிறது. மிக முக்கியமாக ஆணுறுப்பில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகளைத் தடுப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது.
ஆகவேதான் இதை இயற்கை வயாகரா என்கிறார்கள்.

குறிப்பு: தர்பூசணியில் வெள்ளை நிற சதைப்பாகம்தான் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் வல்லமை படைத்ததாம்.

கற்றாழை

சோற்றுக் கற்றாழை வேர்களை நன்றாக சுத்தம் செய்து அதனை சிறு துண்டுகளாக வெட்டி இட்லி சட்டியில் போட வேண்டும். அத்துடன் தண்ணீருக்குப் பதில் பாலை ஊற்ற வேண்டும். பின்னர் அதனை அடுப்பில் வைத்து வேக வைத்து, பின்னர் காய வைக்க வேண்டும் தொடர்ந்து அதனை பொடியாக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து ஆண் பெண் இருவருமே பாலில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தாம்பத்யத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்.

கோழி முட்டை

இளம் வயதில் சிலர் அளவுக்கு அதிகமான சுயஇன்பம் அனுபவித்ல் உள்ளிட்ட தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபட்டதால் ஆண்மைக் குறைவு ஏற்படுவதுண்டு.

இத்தகையப் பிரச்னைகளைப் போக்க நாட்டுக் கோழி முட்டைகளைச் சாப்பிடலாம். இரண்டு நாட்டுக் கோழி முட்டைகளை ஒரு மண் பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். சிறிது சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து லேசான சூட்டோடு சாப்பிட்டு விட வேண்டும். காலை உணவுக்குப் பதில் இந்த முட்டையை மட்டும் சாப்பிட்டு பால் குடித்து வரலாம். இதை தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முருங்கை

தாம்பத்யத்தில் ஆர்வம் அதிகரிக்க முருங்கைப் பூவை உணவாகவோ மருந்துகளுடன் சேர்த்தோ பச்சையாகவோ சாப்பிட்டு வர வேண்டும். உடல் சோர்ந்து உள்ளம் சோர்ந்து போனவர்கள் தினமும் நான்கைந்து முருங்கைப்பூக்களைத் தினமும் இரண்டுவேளை பச்சையாகச் சாப்பிட்டால் மிகவும் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். அரைக்கீரையுடன் அரைப் பங்கு முருங்கைப்பூவைச் சேர்த்துக் கடைந்து சோற்றுடன் சாப்பிட்டு வந்தால் தாம்பத்யத்துக்கு தேவையாக சக்தி கிடைக்கும். இதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் சாப்பிடலாம்.